இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை 4 வருட காலத்திற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இந்த வரிச்சலுகை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி நிறைவடையவிருந்தது.
புதிய ஜி.எஸ்..பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை தீர்வை வரி சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.