ஜெரோம் தொடர்பில் நீதிமன்றின் புதிய உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் அரச மற்றும் தனியார் வங்கிக் கணக்குகள் ஒன்பதை சோதனையிட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மனுவொன்றை தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் தனிப்பட்ட கணக்குகள், அவரது தனிப்பட்ட வணிக கணக்குகள், பிரசங்கம் நடைபெறும் தேவாலயத்தின் கணக்குகள் மற்றும் அவரது மனைவியின் கணக்குகள் ஆகியவற்றை சோதனை செய்ய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.