டக்ளஸ் இரகசியமாக டெல்லி பயணம் !

டக்ளஸ் தேவானந்தா இரகசியமாக டெல்லி பயணித்துள்ள நிலையில் பயணம் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் டெல்லி விஜயம் தொடர்பில் விரைவில் தகவல் வெளியிடப்படுமென அவர் சார்ந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் டக்ளஸின் டெல்லி பயணம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்திருந்தார்.

அண்மையில் இந்தியாவிற்கு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பயணித்த குழுவில் டக்ளஸ் தேவானந்தாவும் உள்ளடங்கியிருந்தார்.

அதேவேளை ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார் .