தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை ; 3 பேர் கைது

தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில்  பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை உடவலவ விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முற்றுகையிட்டனர்.

உடவலவ விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்டனர்.

அங்கு  5 அடி உயரம் கொண்ட 20 ஆயிரத்து 674 கஞ்சா செடிகளை  அழித்துள்ளதுடன்,  சந்தேக நபர்கள் 3 வரை  உடவலவ விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

20 பேர்ச் காணியில் 4,358 கஞ்சா செடிகளும், 10 பேர்ச் காணியில் 2,178 கஞ்சா செடிகளும், 30 பேர்ச் காணியில் 6,751 கஞ்சா செடிகளும்,  30 பேர்ச் காணியில்  7,387 கஞ்சா செடிகளுமாக  20 ஆயிரத்து 674 கஞ்சா செடிகள் பிடிங்கி அழிக்கப்பட்டுள்ளன.

 

குறித்த சம்பவத்தின் போது  கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.