தனியார் காணியொன்றின் கிணற்றிலிருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி, தச்சந்தோப்பு என்ற இடத்தில் காணியை சுத்தப்படுத்தும்போது மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் சனிக்கிழமை (8) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணற்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும்போதே இந்த மோட்டார் குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.