தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாகக் குழு தெரிவு

தமிழரசு கட்சியின் 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உந்துதலில் இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக குழுத் தெரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது.

இராசமாணிக்கம் சாணக்கியனின் முழு முயற்சியில் மட்டக்களப்பில் வட்டாரக்கிளை, பிரதேசக்கிளை மற்றும் தொகுதிக்கிளை முறையே அமைக்கப்பட்டு நேற்று மாவட்ட நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி தலைவர் குகதாசன், செல்வேந்திரன், நடராசா மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் இத்தெரிவு இடம்பெற்றது.

அதன்படி, தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், பொருளாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன், உப தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், உப செயலாளராக முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் 10 நிர்வாக உறுப்பினர்கள் இதன்போது தெரிவுசெய்யப்பட்டனர்.