இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேரி 200 வருட வரலாற்றை நினைவு கூறும் நிகழ்வாக தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் ஏற்பாட்டில் எழுச்சி நடைபவணி இன்று (12) சனிக் கிழமை நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்த எழுச்சி நடைபவணி ஒன்று நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மும்மத மதவழிப் பாட்டுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான. மயில்வாகனம் உதயகுமார் மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர். இராஜாராம்ஆகியோர் தலைமையில் நடைபவணி நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
நுவரெலியாவில் ஆரம்பமாகிய இந்த எழுச்சி நடைபவணி நுவரெலியா கண்டி வீதி, புதியகடை வீதி,தர்மபால சந்தியினூடாக நானுஓயா, ரதல்ல, லிந்துலை வழியாக தலவாக்கலை நகரத்தை சென்றடைந்தது.இந்த நடைபவணியில் நுவரெலியா, உடபுசல்லாவ, இராகலை, கத்தப்பளை, ஹைபொரஸ்ட், கோணபிடிய , லபுக்கலை உட்பட பல தோட்டங்களி லிருந்து தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு தேசிய கொடி மற்றும் பதாதைகள் ஏந்தியவண்ணம் உரிமை கோசங்கள் எழுப்பியவாறு நடைபவணி நடைபெற்றது.
இதேவேளை அட்டன் மல்லிகைபூ சந்தியிலிருந்து ஆரபமாகிய நடைபவணிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினறுமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அகியோர் தலைமை தாங்கினார்கள்.
அட்டன் மல்லிகைபூ சந்தியில் நேற்று காலை ஆரம்பமாகிய நடைபவணி கொட்டக்கலை பத்தனை வழியாக தலவாக்கலை நகரை சென்ரடைந்தது.இந்த நடைபவணியில் அட்டன், மஸ்கெலியா,நோர்வூட், பொகவந்தலாவ, கினிகத்தேன, கொட்டக்கலை, வட்டக்கொட, கொட்டக்கலை உட்பட பல பிரதேச தோட்ட மக்கள் கலந்துக்கொண்டனர்.