தவறான மருந்தை உண்டவர் மரணம்

மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை  உட்கொண்ட  ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்

குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவந்த சோமாவதி என்ற  62 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய் மருந்தினை மருந்தகம் வழங்கியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சோமாவதியின் கணவர் கடந்த 31 ம் திகதி மருந்துகளை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் .ஆனால் அங்கு மருந்துகள் இல்லாததால் அவர் தனியார் மருத்துவமனையில் மருந்துகளை கொள்வனவு செய்த போதே இந்த சம்பவம் இடமடபெற்றுள்ளது.