தாயும் குழந்தையும் மாயம்

கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ளனர். அவ்விருவரையும் ் தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் வசித்து வந்த தாயும் குழந்தையுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

22 இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயதும் ஏழு மாதங்களேயான மகள் தருஷிகா அபி ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

சுகயீனம் காரணமாக  சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு தனது குழந்தையுடன் கடந்த 17ஆம் திகதி சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என அவரது கணவர் மோகனசுந்தரம் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி பேருந்தில் ரிக்கிலகஸ்கட நகருக்குச் சென்றதாகவும், ஊரைச் சேர்ந்த சிலர்  அவர்களை பார்த்ததாகவும் பலர் தன்னிடம் கூறியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் மற்றும் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.