திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு

கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்குள் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் கண்ணீர் புகைக்குண்டு ஒன்று வெடித்ததாகவும், பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட கண்ணீர் புகைக்குண்டு மீண்டும் கொண்டு வரப்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.