திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் திருடிய பொருட்களை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 26 ஆ திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.
அக்கறைச்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடையொன்றில் திருடிய பொருட்களை தம் வசம் வைத்திருப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.