தெல்லிப்பழை துர்க்காதேவியின் மஹோற்சவம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை(18.08.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காலை-08.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து துர்க்கை அம்பாள், விநாயகப் பெருமான், முருகப் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் உள்வீதியில் எழுந்தருளிக் கொடித்தம்பத்தடியைச் சென்றடைந்தனர்.

பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷங்களுடன் காலை-10 மணியளவில் கொடியேற்ற உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து முத் தெய்வங்களும் அடியவர்கள் புடைசூழ உள்வீதியில் உலா வந்தனர்.

இதேவேளை, இவ் ஆலயக் கொடியேற்ற உற்சவத்தில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.