தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சனிக்கிழமை (19) இரவு தங்கியிருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் முப்பது வயது மதிக்கத்தக்கவர்
பணி முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் முன் வீதியில் நின்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் வேறு யாரையாவது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.