தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவைத் தாபிக்க நடவடிக்கை

நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக எழுகின்ற தாக்கங்களைக் குறைப்பதை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்ற மறுசீரமைப்புக்கள் மூலம் அடையப்பெறுகின்ற பயன்களை உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு வருதல் மற்றும் குறித்த மறுசீரமைப்புக்களில் இடைக்கால மற்றும் நீண்டகால நிலைபேற்றுத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக பொருளாதாரத்தின் சகல பிரிவுகளிலும் உற்பத்தித்திறனை விருத்தி செய்ய வேண்டியுள்ளது.

ஆனாலும், உற்பத்தித்திறன் தொடர்பான பிரச்சினைகளை முறைசார்ந்த வகையில் செயற்படுவதற்காக சட்டரீதியாக பொறுப்புக் கூறவேண்டிய நிறுவனமொன்று எமது நாட்டில் இல்லை.

அதனால், உற்பத்தித்திறன் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தவதற்காக மற்றும் ஆய்வுகள் மூலம் உருவாகின்ற சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கொள்கை விதிகளை அரசுக்கு பரிந்துரைப்பதற்காக சுயாதீன நிறுவனமாக தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவின் நிறுவனக் கட்டமைப்பைத் தீர்மானித்தல், குறித்த ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கான சட்டவாக்கம் மற்றும் குறித்த ஆணைக்குழுவை தாபித்தல் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டிய வேறு விடயங்கள் பற்றி ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிபுணர்குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.