பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் அதிகாரிகள் பற்றாக்குறையினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முடக்கத்தில் உள்ளது.
அரச சேவை குழுவில் பொலிஸ் அதிகாரிகள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமையால் மீண்டும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இருக்க வேண்டிய அதிகாரிகளின் எண்ணிக்கையில் அரைவாசிக்கும் அதிகமானோர் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் 150 அதிகாரிகள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது சுமார் 70 அதிகாரிகளே உள்ளனர்.
இந்த வெற்றிடங்களுக்கு தேவையான அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சிடமும், முகாமைத்துவ சேவை திணைக்களத்திடமும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இருப்பினும், அதற்கான எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் முன்வைத்துள்ள முறைப்பாடுகளில் இடமாற்றம், பதவி உயர்வு, சேவையிலிருந்து விலகியோர்,
மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கைகள் உள்ளிட்டவை அடங்குவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.