தொடர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாதஸ்வர இசைக்கலைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (11) சிகிச்சை பலனின்றி யாழில் உயிரிழந்தார்.
கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய நாராயணசாமி கோவர்த்தனன் என்கிற நாதஸ்வர வித்துவானே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.