நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி காவிந்த ஜயவர்தன ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.