நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவி விலகல்

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவியில் இருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக பி.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதம் நிதியமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தின் பிரதியொன்று ஜனாதிபதி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் பி.விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.