நல்லூர்க் கந்தன் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா இன்று திங்கட்கிழமை(21.08.2023) காலை-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேற்பெருமானுக்கு நேற்றுக் காலை விசேட அபிஷேக பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் வேற்பெருமான், வள்ளி- தெய்வயானை நாயகியர், விநாயகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களுக்கும் பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

முத்தெய்வங்களும் கொடித் தம்பத்தடியை வந்தடைந்ததைத் தொடர்ந்து கொடியேற்றத்திற்கான கிரியை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து இன்று காலை-10 மணியளவில் கொடியேற்றம் மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

தம்ப பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து முத்தெய்வங்களும் அடியவர்கள் புடைசூழ உள்வீதியில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். முற்பகல்-11.15 மணியளவில் உள்வீதி உலா நிறைவுற்றது.

இதேவேளை, இவ் ஆலயக் கொடியேற்றத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.