நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி புகையிரத சேவையை முன்னெடுக்க கடிதம்

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரிப் புகைவண்டி சேவையை முன்னெடுக்கவேண்டும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், தற்போது புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழா 21.08.2023 ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தினமும் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிதது அடியவர்களின் பயணவசதிகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.