ஜே-135 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் சமூக உற்பத்தித்திறன் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆரோக்கியமான வீடு தொடர்பான விழிப்புணர்வு சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பிரினராலும், தொழில் வழிகாட்டல் தொடர்பான விழிப்புணர்வு மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தராலும், மத்தியஸ்த சபை தொடர்பான அறிமுக விழிப்புணர்வு மத்தியஸ்த சபை மேம்பாட்டு உத்தியோகத்தராலும் வெள்ளிக்கிழமை(18.08.2023) மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக சுய ஆர்வத்தின் மூலம் Ari embroidery கற்று வளர்ந்துவரும் தொழில் முயற்சியாளராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ன நிதர்ஷனியின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது.