பொதுஜன பெரமுன கட்சியினதும்,ஐக்கிய தேசியக் கட்சியினதும்,தேசிய மக்கள் சக்தியினதும் தொகுதிக் கூட்டங்களில் தற்போது பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 70 சதவீதத்துக்கு அதிகமான தொகுதி கூட்டங்களை நிறைவு செய்துள்ளதாகவும் அடுத்த தேர்தல்களில் தமது கட்சியே வெற்றி பெறும் என ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கூறுகிறார்.
அவ்வாறானால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு நாம் கூறுகிறோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.