நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தப்பியோடியமைக்கான எதிர்கட்சி தலைவருக்கு கின்னஸ் விருதை வழங்கவேண்டும்

அரசியல் வட்டாரத்தில் தன்னை தனிப்பட்ட முறையில் பிடிக்காத பலர் உள்ளது தனக்கு தெரியும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவிதியை மாற்ற முடியும் என தெரிந்திருந்தால் கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் மீண்டும் அரசியலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

கடந்த வருடம் நான் உங்களை சந்தித்தவேளை இலங்கையின் எதிர்காலம் மிகவும் இருள்மயமானதாக காணப்பட்டது  உங்கள் மனங்களில் இலங்கை குறித்து கேள்வி காணப்பட்டது ஆனால் நீங்கள் அனைவரும்ஒத்துழைத்தீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நீங்கள் ஒத்துழைத்தீர்கள் அதற்காக நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்

கடந்த வருடம் எங்களின் பிரச்சினை என்னவென்றால்  நாங்கள் தீர்வுகள் நாங்கள் முன்னெடுக்க கூடிய யதார்த்தபூர்வமான நடவடிக்கைகள் குறித்து  சிந்திக்கவில்லை  நாங்கள் அதன் அரசியல் குறித்தே எங்கள் கவனத்தை திசைதிருப்பியிருந்தோம்..

மக்கள் அழுத்தங்கள் காரணமாக விரக்தியடைவதை என்னால் புரிந்துகொள்ள முடியும் ஆனால் ஆர்ப்பாட்டங்கள் தீர்வை கொண்டுவருவதில்லைஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது உள்நோக்கம் கொண்டவேறு சக்திகள் அதனை பயன்படுத்த முயலக்கூடும்.

மேலும் தலைமைத்துவ வெற்றிடமொன்று உருவானது அரசியல் தலைமைத்துவ வெற்றிடம்,

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியவேளை அப்போதைய ஜனாதிபதி எதிர்கட்சி தலைவரை தலைமை தாங்க அழைத்தவேளை அவர் அதிலிருந்து தப்பியோடினார்.

இந்த நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தப்பியோடியமைக்கான எதிர்கட்சி தலைவருக்கு கின்னஸ் விருதை வழங்கவேண்டும் .

உங்களிடம் ஆட்சிபொறுப்பை ஒப்படைக்க முன்வந்தவேளை நீங்கள் அதிலிருந்து தப்பியோடினீர்கள் ஏனைய பலரும் அவ்வாறே செயற்பட்டனர்.

என்னை அழைத்தவேளை – நான் வேண்டுகோள் விடுக்கவில்லை – என்னை அழைத்தவேளை நான் இதில் மீண்டும் ஈடுபடுவதா என சிந்திக்கவேண்டிய நிலையிலிருந்தேன்,நான் கிட்டத்தட்ட அரசியல் ஓய்வு நிலையிலிருந்தேன் ஆனால் நாடு நெருக்கடி நிலையிலிருந்தது,என்னால் அதனை மாற்ற முடியும் என எனக்கு தெரியும் பொருளாதார அரசியல் ரீதியில் ஸ்திரதன்மை மிக்கதாக மாற்ற முடியும் என்பது எனக்கு தெரியும் ஆகவே அனைத்து விமர்சனங்களுக்கு மத்தியிலும் நான் அதனை ஏற்றுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.