நாமல் குமாரவை தாக்கி பணம், கைத்தொலைபேசி கொள்ளை

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவை தாக்கி அவரிடமிருந்து 60,000 ரூபா மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தந்தை மற்றும் மகன் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தந்தை 35 வயதான வர்த்தகராவார். அவரது மகன் 23 வயதான இளைஞராவார்.

நாமல் குமாரவின் மனைவி பொலிஸ் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.