நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட நிலை

நவாலி வழுக்கையாறு வெளியால் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்ளஇளைஞன் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நவாலி வழுக்கையாறு வெளியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை நாயொன்று திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தங்கராசா துஷ்யந்தன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.