நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் நட்டஈடு இல்லை

வறட்சி காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால், நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

நெற்பயிர்களுக்கு தீ வைப்பது சட்டவிரோதமானது எனவும், அண்மைய நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்ததாகவும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.