பதில் நிதியமைச்சராக ஷெஹான்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சிங்கப்பூர் விஜயத்தை முடித்துவிட்டு மீண்டும் நாடு திரும்பும் வரையில் நிதி அமைச்சின் கடமைகளை மேற்கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்கள் பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) அதிகாலை சிங்கப்பூர் சென்றததை தொடர்ந்து, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவினால் கடமைகள் மேற்கொள்ளப்படுகிறது.