இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் பர்க்கி அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைக்கு நேற்று (07) விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பாகிஸ்தானின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள குழாய் நீர் இணைப்புகள் மற்றும் பொதுக்கிணறுகளைத் திறந்து வைப்பதற்காக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அங்கு சென்றிருந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 500-க்கும் அதிகமானவர்களுக்கான குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.