பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களை மோசமானவை என இலங்கைஅணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத்ஜெயசூரிய சாடியுள்ளார்.
ஐபிஎல்போட்டிகள் இடம்பெறும் ஆடுகளங்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேகமாக அடித்தாடுவதற்கு உகந்த ஆடுகளங்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
எல்பிஎல் போட்டிகளுக்கான பிரேமதாச மைதானத்தின் மோசமான ஆடுகளங்கள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளேன் என தெரிவித்துள்ள அவர் அடுத்த சுற்றுதகுதிகான் போட்டிகள் சிறந்த ஆடுகளத்தில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
பிரேமதாச மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உகந்ததாக காணப்படாததால் அணிகள் அதிக ஓட்டங்களை பெறுவதற்கு சிரமப்படும் நிலை காணப்படுகின்றது.