புதிய இறப்புச் சான்றிதழ்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகத் திணைக்களம் மற்றும் மரண பரிசோதகர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்தப் புதிய இறப்புச் சான்றிதழை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.