“பூத்த கொடி” புகழ் குமாரசாமி மறைந்தார்!

தாயக உணர்வாளரும் உடுப்பிட்டி மண்னைச் சேர்ந்த “ பூத்த கொடி பூக்கள் பூக்கள் இன்றித் தவிக்கின்றது தாயப் பாடலை இசைத்தவருமான சங்கீத பூஷணம் குமாரசாமி செல்லத்துரை இறைவனடி சேர்ந்தார்.

குமாரசாமி செல்லத்துரை (1951. 01. 10 ) யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர்இ ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை. ஈழத்துச் சீர்காழி என அழைக்கப்படும் இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன், திருப்பாழயம் ரி. என். சிவசுப்பிரமணியம்பிள்ளை  சிதம்பரம் எஸ். வேணுகோபாலய்யர், மைலம் எம். பி. வச்சிரவேலு முதலியார் கலாபூஷணம் திரு. ஜே. இராசலிங்கம் ஆகியோரிடம் தனது இசைக் கலையைப் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். எஸ். எல். ஈ. ஏ. எஸ் சித்தியடைந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இசைத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.

இசைத்துறையில் இவரது ஆளுமையைக் கெளரவித்து ஞானபண்டித இசையரசு, இசை மாமணி, கீதாசாகரம்  இசை நாவலன் சங்கீத பூஷணம் ஆகிய பட்டங்கள் வழங்கப்பெற்றார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சார்ந்து பல பாடல்களை இவர் இசைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.