போராட்டத்தை கலைக்க நீர்த் தாரை பிரயோகம்

சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக காவல் துறையினர் நீர்த் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நகர மண்டபம் அருகில் இன்று மாலை இந்த நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சோசலிச இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகர மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க ஆகியோரிடம் பேரணியாக செல்ல அனுமதி வழங்க முடியாது என காவல் துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து விகாரமஹாதேவி பூங்காவை நோக்கிச் செல்லவிருந்தபோது, ​​பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் நீர்த் தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த காவல் துறையினர், கலகத் தடுப்பு பிரிவையும் இராணுவத்தினரையும் அழைத்துள்ளனர்.