போலி நாணயத்தாள்களுடன் இளைஞர்கள் கைது!

மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று (6) மாலை மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 15 உம், 1,000 ரூபாய் போலி தாள்கள் 12 உம், 5,000 ரூபாய் போலி தாள்கள் 09  உம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து 64 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட போலி நாணயத் தாள்களும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.