மட்டக்களப்பு வெல்லாவெளியில் கசிப்பு கடத்தல் மற்றும் உற்பத்தியில் ஈடுபட்ட 4 பேர் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை  இல்லாதொழிக்கும் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மற்றும் கசிப்பு கடத்தி சென்ற 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 200 லீற்றர் கோடா, 50 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக  வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து திக்கோடை பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் 200 லீற்றர் கோடா 50 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து நெல்லிக்காட்டு பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து இரு மோட்டர் சைக்கிளில் கசிப்பு உற்பத்தி  கலன்களில் 140 லீற்றர் கோடாவை கடத்திச் சென்ற இருவரை பொலிஸார் வீதியில் வைத்து கைதுசெய்ததுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் கலனின் கொண்டு சென்ற கோடா மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.