மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

கெப்பத்திகொல்லாவ, கலவெவ பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கட்டுவலகலேவ, கெப்பத்திகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள நெல் ஆலை ஒன்றில் தங்கியிருந்ததாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மேலும் இருவர் மண்வெட்டியால் உயிரிழந்தவரின் தலையில் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவரை அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெப்பத்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.