மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

மொனராகலை, வெள்ளச்சிகடை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை (18) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியில் வசிக்கும் நாற்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.