மன்னிப்பு கோரினார் உமாரா சிங்கவங்ச

2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமைக்காக பாடகி உமாரா சிங்கவங்ச மன்னிப்பு கோரியுள்ளார்.

தாம் ஒரு போதும் நாட்டின் கீர்த்திக்கும், தேசிய கீதத்தின் பெருமைக்கும் பாதிப்பினை ஏற்படுத்த விரும்பியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் பெருமையை பாதுகாப்பதற்கும், தேசிய கொடியை சுமப்பதற்கும் எப்போதும் பெருமைக்கொள்வதாகவும்  பாடகி உமாரா வீரவங்ச அறிக்கையொன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளார்.