மரம்முறிந்து விழுந்ததன் காரணமாக தெகிவளை மிருகக்காட்சி சாலையின் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
தெகிவளை மிருகக்காட்சி சாலைக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மரம்முறிந்து மின்சார தூண்மீது விழுந்தது அது பாதுகாப்பு உத்தியோகத்தரின் மீது விழுந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக 54 வயது உபுல்மரகன்ட உயிரிழந்துள்ளார்.
மிருகக்காட்சி சாலைக்குள் விலங்குகள் வைத்தியசாலை முன்பாக உள்ள மரமே முறிந்துவிழுந்துள்ளது.அது மின்சாரகம்பமொன்றின் விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.