மலையக மக்களுக்கு மிக விரைவில் பத்து பேர்ச் காணி உரிமை வழங்கப்படும். அது தொடர்பாக ஜனாதிபதி உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். அதுதொடர்பில் நன்றியை தெரிவிக்கிறேன். ஆனால் இது தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கிறேன்.
அதேபோன்று அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருடனும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறோம்.
அதன் பிரகாரம் மிக விரைவாக மலைய மக்களுக்கு 10பேச் காணி உரிமை வழங்கப்படும். என்றாலும் இதனை சிலர் பொய்யாக தெரிவித்ததாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பலர் வரலாறு தெரியாமல் கதைக்கின்றனர். இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு சென்று வாழும் மக்கள் அருமையாக வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் தமிழ் நாட்டில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியில் சென்றிருக்கின்றனர். அவர்கள் எந்த நோக்கத்துக்காக சென்றார்கள் என்பதை பார்க்கவேண்டும். ஆனால் இங்கு இருக்கும் மலைய மக்கள் கூலித்தொழிலுக்காக இங்கு வந்து அடிமையாக்கப்பட்டார்கள்.
அத்துடன் எமக்குள் பிரினை இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அதாவது நாங்கள் இந்திய வம்சாவளி மக்கள் என அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். ஏனையவர்கள் இலங்கை தமிழர்கள் என தெரிவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
எங்களுக்கு நடந்த அநீதி வேறு இலங்கை தமிழர்களுக்கு அடம்பெற்ற அநீதி வேறு. அதனால் நாங்கள் இலங்கை தமிழர்கள் என்றால் எமது எமக்கு ஏற்பட்ட அநீதி மறைக்கப்படும்.
அதேபோன்று நான் ஒரு சட்ட ரீதியான இந்திய வம்சாவளி தமிழன். அதனை புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் மலையக மக்களின் மொத்த எண்ணிக்கை 15இலட்சம் அவர்களில் 2இலட்சம்பேர்தான தோட்டங்களில் தொழில் செய்துவருகின்றனர். அந்த இரண்டு இலட்சம் பேரினாலே 15இலட்சம் பேரின் அடையாளம் பாதுகாக்கப்படுகின்றன.
அத்துடன் எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதல்ல. யாரு இந்த அமைச்சை வகித்தாலும் அந்த நிலையே இருக்கிறது.
எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த நிலைமையாகும். எனக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அதற்கான நிதி என்னிடம் இல்லை.
நான் இந்த அமைச்சை பொறுப்பேற்கும் போது 4ஆயிரம் வீடுகளில் 699வீடுகளே சகல வசதிகளுடன் சம்பூர்ணமாக கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. ஏனைய வீடுகளை பூரணப்படுத்த வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. போதுமான நிதி இல்லாமையாமல் எதனையும் செய்ய முடியாமல் போயிருக்கிறது.
அதனால் மலையக மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்ரையாடலில் அனைவரும் கலந்துரையாடலில் பங்குகொள்வதே இன்றைய தேவையாகும். அதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.