மலை உச்சியில் பெண்ணின் சடலம்

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில்   அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சிக்கு சென்றுள்ளனர்.