மாடுகளை திருடிச் சென்றவர் கைது

வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து 3 மாடுகளை திருடிச் சென்ற ஒருவர்  வியாழக்கிழமை (03) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகனத்தில் மாடுகளை கடத்துவதாக, மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நவாலி மயானத்துக்கு அருகில் வைத்து, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.