மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவில் இருந்தும் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு நகரப் பகுதியில் இருந்து 2 ஆம் திகதி புதன்கிழமை (02/08/2023) காலை 9 மணிக்கு குறித்த ஆதரவு நடை பயணம் ஆரம்பமாகும்
புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து கைவேலி வரை நடைபயணம் நடைபெறும் இதனைத் தொடர்ந்து கைவேலியில் இருந்து வாகன பேரணியாக உடையார் கட்டு சென்று உடையார்கட்டு நகரப் பகுதியில் நடை பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து உடையார் கட்டில் இருந்து வாகனப் பேரணியாக தேராவில் சென்று தேராவிலில் இருந்து ரெட்பானா வரை நடை பயணம் இடம்பெறும். இதனை அடுத்து ரெட் பானாவில் இருந்து வாகன பேரணியாக சென்று விசுவமடு நகரப் பகுதியில் நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து விசுவமடுவில் இருந்து வாகனப் பேரணியாக சென்று தர்மபுரம் நகரப் பகுதியில் நடை பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து தர்மபுரத்தில் இருந்து வாகனப் பேரணியாக சென்று புளியம்பொக்கனை சந்தியில் நடைப் பயணம் இடம்பெறும்.
இதனை அடுத்து புளியம்பொக்கனை சந்தியில் இருந்து வாகன பேரணியாக சென்று பரந்தன் நகரப் பகுதியில் நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து பரந்தனில் இருந்து வாகனப் பேரணியாக சென்று கரடிப்போக்கு சந்தியில் இருந்து கிளிநொச்சி டிப்போ சந்தி வரை நடைப் பயணம் இடம் பெறும். அன்று இரவு கிளிநொச்சி கருணா இல்லத்தில் ஓய்வு பெறும் இந்த நடை பயணம்
மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு மலையக எழுச்சி பயண வட மாகாண ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 3 ஆம் திகதி வியாழக்கிழமை (03/08/2023) மாண்புமிகு மலையகம் யாழ். சிவில் சமூகம் ஏற்பாடு செய்துள்ள ஆதரவுப் பேரணியொன்று யாழ்ப்பாணம் பஸ்தரிப்பிடத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 03/08/2023 திகதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து நடை பயணம் ஆரம்பமாகி வைரவர் கோவில் வரை நடை பயணம் இடம் பெறும்
வைரவர் கோவிலில் இருந்து வாகன பேணி ஊடாக 55 ஆம் கட்டையை சென்றடைந்து 55 ஆம் கட்டை முதல் இரணைமடு சந்தி வரை நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து இரணைமடு சந்தியில் இருந்து வாகனப் பேரணியாக இந்துபுரம் தேவாலயம் சென்று, இந்துபுரம் தேவாலயம் முதல் பல்கலைக் கழக சந்தி வரை நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து பல்கலைக் கழக சந்தியில் இருந்து வாகன பேரணியாக சென்று திருமுறிகண்டி கோயில் பகுதியில் நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து திருமுறிகண்டியில் இருந்து வாகன பேரணியாக மாங்குளம் சென்று, மாங்குளம் யுவசக்தி அலுவலகத்தி ற்கு முன்பாக இருந்து மாங்குளம் புனித அக்னஸ் தேவாலயம் வரை நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து மாங்குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக கனகராயன் குளம் சென்று கனகராயன் குளம் நகரப் பகுதியில் நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து கனகராயன் குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக புளியங்குளம் சென்று, புளியங்குளம் முத்துமாரியம்மன் கோவிலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நடை பயண குழுவினருட ன் யாழ்ப்பாண மாவட்ட நடை பயண குழுவினரும்இணைந்து முத்து மாரியம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட நடை பயண ஏற்பாட்டு குழுவினர் ஏற்பாடு செய்துள்ள வழிபாடுகளில் கலந்துகொண்டு அவர்களுடன் இணைந்து அங்கிருந்து புளியங்குளம் நகரப் பகுதி வரை நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து புளியங்குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக ஓமந்தை சென்று ஓமந்தை நகரப் பகுதியில் நடைப் பயணம் இடம் பெறும் இதனை அடுத்து ஓமந்தையில் இருந்து வாகனப் பேரணி ஊடாக தாண்டிக்குளம் சென்று தாண்டிக்குளம் நகரப் பகுதியில் நடை பயணம் இடம் பெறும்.
இதனை அடுத்து தாண்டி குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக வவுனியா பழைய பேருந்து நிலையம் சென்று பழைய பேருந்து நிலையம் முன்பாக நடை பயணம் இடம் பெறும்.
வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மண்டபத்தில் அன்றையதினம் மாலை 3 மணிக்கு மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு மலையக எழுச்சி பயணத்தின் வவுனியா ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்துள்ள மலையக எழுச்சி பயணத்தின் நோக்கம் குறித்தும் மலையகம் 200 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சிறப்புரைகள் இடம் பெறுவதுடன் அன்று இரவு வவுனியாவில் ஓய்வுபெறும்.
இதன்பின்னர் 04/08/2023 காலை 5 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவிலில் இருந்து மதவாச்சி நோக்கி நடை பயணம் இடம்பெறும்