மாதகல் சென்தோமஸ் வித்தியாசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.மாதகல் சென்தோமஸ் வித்தியாசாலையில் போதை ஒழிப்பு, மகிழ்ச்சியான குடும்பம், முறைப்பாட்டுப் பொறிமுறை தொடர்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு  திங்கட்கிழமை(26.06.2023) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்கினர்.