மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழு உறுப்பினர் பலி!

மினுவாங்கொடை – மஹகம பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவொன்றின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விசேட  அதிரடிப்படையினர் மினுவாங்கொடை – மஹகம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேக நபர், விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த பாதாள உலகக் குழு உறுப்பினரான மனிக்குகே கசுன் லக்சித சில்வா என்ற 29 வயதானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.