போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன் பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது.
ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு மில்லியன் கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது, வெளிநாட்டு நாணயங்களும் அவரது வங்கிகணக்கிற்கு வந்துள்ளன.
ஜெரோம்பெர்ணான்டோவிற்கு அவரை பின்பற்றுபவர்களும் நெருங்கிய சகாக்களுமே அதிகஅளவில் பணத்தை வழங்கியுள்ளமையினால் போதகருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிஐடியின் சட்டவிரோத சொத்து விசாரணையின் போது ஜெரோம்பெர்ணாண்டோவை பின்பற்றும் 18,000 பேர் அவருக்கு நிதி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்காவில் மிராகில் டொம்மை அமைப்பதற்காகவே இந்த பணத்தை அவர்கள் வழங்கியுள்ளனர்.
ஜெரோமை பின்பற்றுபவர்கள் சிலரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள தெரிவித்துள்ள சிஐடியினர் நன்கொடையாக பணத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உட்பட ஏழு நாடுகளில் உள்ளவர்கள் போதகரை பின்பற்றுவதும் இந்த நாடுகளில் இருந்து ஜெரோமின் இலங்கைவங்கி கணக்குகளிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
போதகர் ஜெரோம்பெர்ணாண்டோவை பின்பற்றுபவர்களில் அரசஅதிகாரிகளும் உள்ளனர் அவர்கள் அரசாங்கத்திடமிருந்துதங்களுக்கு கிடைத்த வாகன அனுமதிப்பத்திரங்களை விற்று அதன் மூலம் கிடைத்த நிதியை மிராக்கிள் டொம்மை கட்டுவதற்கு வழங்கியுள்ளனர்.