முல்லைத்தீவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்து

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வழி வகுத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை மாற்றி மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணுங்கள் எனக் கூறி சபாநாயகர் இடம் கொடுக்க உள்ள மனுவுக்கு வலி சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் துண்டு பிரசுர விழிப்புணர்வு நடவடிக்கையும் புதுக் குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டின் பொதுமக்களின் சுகாதார சேவையின் பாதிப்பு தொடர்பான துண்டு பிரசுரம் அங்கு வருகை தந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்களிடமிருந்து கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் முத்துகுமாரசாமி லக்சயன் தலைமையில் இந்த கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது இதன்போது புது குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சத்திய சத்தியசுதர்சன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர் மக்கள் இதில் கையெழுத்துவைத்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்.