அதனை, இயங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறி நேற்று வியாழக்கிழமை (03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினருடன் நீண்ட நேர விவாதம் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன் தெரிவிக்கையில்,
தனியார் பஸ் சங்கத்தினால் கூறப்பட்ட ஏற்பாடுகள் பிரதேச சபையினால் 100 வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வேறுவிதமான பிரச்சினையை கூறுகிறார்கள்.
முள்ளிவாய்க்காலால் பஸ் வரும் என்றால் பஸ் நிலையத்தில் பஸ் செல்வதற்கு எந்த இடையூறும் இல்லை போன மாதம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இன்று வேறு பிரச்சினையை கூறுவதாக இருந்தால் நாங்கள் நிதியை வீண்விரயம் செய்திருக்கிறோம் என தெரிவித்தார்.
அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூறுகையில், நீங்கள் முரண்பட்டது சரி ஏனைய மாவட்ட பஸ் நிலையங்களுடன் ஒப்பிடும் போது இது பஸ் தரிப்பிடம் போலவே இருக்கிறது. மாவட்ட பஸ் நிலையம் போல் இல்லை என தெரிவித்தார் .
தனியார் பஸ் சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், பாதுகாப்பற்ற பஸ் நிலையத்திற்குச் செல்ல நாங்கள் தயாராகவில்லை என்றனர்.
இ.போ.ச கருத்து தெரிவிக்கையில், இணைந்த நேர அட்டவணையினை வழங்கினால் நாங்கள் அங்கு சென்று சேவையில் ஈடுபடமுடியும் என தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிக்கையில், பேரம்பேசி ஒரு வேலையை செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில், பஸ் ஓடுவதற்கான ஆரம்ப வேலைகளை முடித்து கொண்டு பின்னர் அங்கு சென்றதன் பின்னர் இணைந்த நேர அட்டவணையின்படி செயற்படலாம் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் தெரிவிக்கையில், பிரதேச சபையில் வளங்கள் குறைவு. அதனை பயன்படுத்தி அவர்கள் வேலைகளை செய்திருக்கின்றார்கள்.
ஏற்கனவே இவ்வாறு போக முடியாது என கூறியிருந்தால் நான்கு, ஐந்து வீதியையாவது போட்டிருப்பார்கள். சண்டை நேரத்தில் காபெட் போட்டு பஸ் ஓடவில்லை .
இது மக்களுக்கான சேவை எல்லோரும் மனச்சாட்சிபடி இருக்கிறதனை சமாளித்து நடவுங்கள். எதிர்கால வேலைத்திட்டங்களை மேற்கொண்டு தருவோம் என்றார்.
அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கூறுகையில், பஸ் நிலைய பகுதியில் அமைக்கப்பட்ட 16க்கும் மேற்பட்ட மின்விசிறிகள், மின்குமிழ்கள் களவாடப்பட்டிருக்கிறது. அரச சொத்து இவ்வாறான நிலையில் உள்ளது என தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் மஸ்தான் தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட வேலைகளை செய்து முடித்ததன் பின்னர் வவுனியாவைப்போல் பஸ் நிலையம் தான் தேவை, அவ்வாறு செய்து தந்தால் தான் போவோம் என்றால் அது கடினமானதாக இருக்கும்.
ஏதோ ஒரு முடிவு தான் நாங்கள் எடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் பஸ் நிலையத்தை இயங்க வைக்க கடின முயற்சியுடன் இருக்கின்றார்கள்.
வவுனியாவில் 10 மில்லியன் நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட பஸ் நிலையத்தை இ.போ.ச, தனியார் பிடிவாதத்தால் வேறு விதமாக தான் இயங்க வைக்கப்பட்டது. இங்கும் அவ்வாறு தான் வருமோ என்று தெரியாமல் இருக்கிறது. அரசாங்க அதிபருடன் கதைத்து ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கிறீர்கள். அதனை நாங்கள் செயற்படுத்தி தருகின்றோம் என்றார்.