மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அனுல டி சில்வா காலமானார்

மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அனுல டி சில்வா காலமானார்.

கொழும்பு 15, காக்கைதீவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அனுல டி சில்வா எழுத்தாளர், ஊடகவியலாளர்,  சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஆவார்.

இவர் 1964இல் லேக் ஹவுஸ் வெளியீடான மிஹிர பத்திரிகைக்கு தனது பங்களிப்பை வழங்கிவந்ததுடன், 50 ஆண்டுகளுக்கு மேலாக 8க்கு மேற்பட்ட பத்திரிகைகளில் ஊடகவியலாளராகவும் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

பிரபலமான நாவல்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அனுல டி சில்வா எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.