மொனராகலையில் சிறிய நிலநடுக்கம்

இன்று (21) காலை 9.06 மணியளவில் மொனராகலை பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.