வவுனியா, குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
நேற்று புதன்கிழமை (2) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா,குருமன்காடு காளிகோவிலுக்கு அருகாமையில் பெண் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த நபர்களை சிலர் துரத்தி சென்றபோதும் அவர்களை பிடிக்க முயலவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் நெளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த 5 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.